

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நாளை (14-ம் தேதி) காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரைவடசென்னை, மத்திய சென்னை,தென்சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் மருத்துவமுகாம்கள் நடைபெறும். இவற்றில் நோய்த்தடுப்பு மருந்துகள்,மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இம்முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.