Published : 13 Dec 2023 06:04 AM
Last Updated : 13 Dec 2023 06:04 AM

மாற்றுத் திறனாளிகளின் உபகரணம் பழுது நீக்க வாய்ப்பு: தொடர்பு கொள்ள கைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத் தும் ஸ்கூட்டர்கள் உட்பட பல் வேறு உதவி உபகரணங்களை பழுது நீக்க, சம்பந்தபட்ட அலுவலரிடம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திற னாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்கள் (இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி) தண்ணீரில் மூழ்கிசேதமடைந்திருந்தால், அதனை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவரங்கள் பதிவு: எனவே பாதிப்படைந்தவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களின் எண்களில் தொடர்பு கொண்டு உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்படி, வடசென்னை மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை 9499933589 என்ற கைபேசி எண்ணிலும் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரை 9499933470 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933496 என்ற எண்ணிலும், காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933582 என்ற எண்ணிலும், செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933476 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாம். இவ்வாறு பெறப்படும் விவரங்களின் அடிப்படையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம் உபகரணங்கள் பழுது நீக்கம் செய்யப்படும். இந்தத் தகவல் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x