Published : 12 Dec 2023 06:16 PM
Last Updated : 12 Dec 2023 06:16 PM

“இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு” - ஸ்ரீரங்கம் கோயில் சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: "ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, சிலரை மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதித்துள்ளனர். நீண்டநேரம் காத்திருந்த பக்தர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், கோயில் வளாகத்துக்குள் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட சென்றுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, சிலரை மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதித்துள்ளனர். இதனால் நீண்டநேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், கோயில் வளாகத்துக்குள் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும். நடந்தது என்ன? > ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால் பரிகார பூஜை

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக திருச்சி மாவட்ட பாஜகவினர் இன்று கோயிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர். விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு காலை 7 மணியளவில் முதல் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சேவைக்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்கும்படி அங்கிருந்த உண்டியலைத் தட்டி கோஷமிட்டுள்ளனர். இதை அங்கு காவல் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x