ரஜினிகாந்த் பிறந்தநாள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ரஜினிகாந்த் பிறந்தநாள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: ”மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: “இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in