Published : 08 Jan 2018 01:22 PM
Last Updated : 08 Jan 2018 01:22 PM

வரும் 12-ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர்: என்னென்ன நிகழ்ச்சிகள்?- சபாநாயகர் அறிவிப்பு

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று துவங்கியது. அரசின் கொள்கை அறிவிப்புகளையும் திட்டங்களையும் வாசித்த ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

பின்னர் கூட்டம் முடிவடைந்தது. அதன் பின்னர் சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான அலுவல ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் தனபால் தெரிவித்த தகவல்:

* சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.

* 9-ம் தேதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள், 2017- ஆண்டு ஓக்கி புயலில் மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்.

* அது முடிந்தவுடன் அன்றே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்குகிறது.

* 10 ஆம் தேதி புதன் கிழமை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடரும்.

* 11-ம் தேதி தொடர்ந்து நடந்து அன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் பேசுவார்கள்.

* 12-ம் தேதி காலை 2017-18-ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.

* அன்றே, ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலளிப்பார்.

* 2017-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கை குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைக்கான அறிக்கை அதன் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு.

* மானிய கோரிக்கைகள் சட்டமுன் வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் விவாதமின்றி நிறைவேற்றுதல்

* சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும்.

* வேறு அலுவல்கள் இருந்தால் அதுவும் 12-ம் தேதி நிறைவேற்றப்படும்.

* கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடும். ஒவ்வொரு நாளும் ஆரம்பித்தவுடன் கேள்வி பதில் வினாக்கள் விடைகள் இருக்கும்.

* கூடுதலாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்று 12-ம் தேதிக்கும் சபை நடவடிக்கை நீட்டிக்கப்பட்டது.

''சட்டங்கள் நிறைவேற்றப்படும். கூட்டத்தொடர் நடக்கும் போது அது பற்றி அறிந்துக்கொள்ளலாம். உறுப்பினர் பேசுவது குறித்து அவர்கள் கோரிக்கையை பொறுத்து முடிவு செய்வேன்.''

இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x