Published : 11 Dec 2023 06:10 AM
Last Updated : 11 Dec 2023 06:10 AM
செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 13 மையங்களில் நேற்று நடைபெற்ற காவலர் தேர்வில்ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில்காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலைசிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர், மதுராந்தகம், திருப்போரூர், தண்டலம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 4 மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில், 2,541ஆண்கள், 563 பெண்கள் என 3,104 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,038 பேர் தேர்வை எழுதவில்லை. இத்தேர்வை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் பெரும்புதூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 4 மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்வு எழுத விண்ணப்பித்த 6,522 இளைஞர்கள், இளம் பெண்களில் பெரும்பாலோர் ஆர்வமுடன் பங்கேற்று, தேர்வு எழுதினர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கவரைப்பேட்டை, காக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது. 600 போலீஸாரின் கண்காணிப்புடன் நடைபெற்ற இத்தேர்வில் 5731 ஆண்கள், 1311 பெண்கள் என, விண்ணப்பித்த 7042 பேரில், 5542 பேர் ஆர்வமாகத் தேர்வு எழுதினர்; 1,500 பேர் தேர்வு எழுதவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT