உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன்

சென்னை வெள்ளம் |  ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கிய சிவகார்த்திகேயன்: அமைச்சர் உதயநிதி ட்வீட்

Published on

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவானது. இந்த மழையால் தலைநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர், சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in