Published : 10 Dec 2023 04:57 AM
Last Updated : 10 Dec 2023 04:57 AM

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை: மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, இந்த 4 மாவட்ட மின் உபயோகிப்பாளர்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4 முதல் டிச.7-ம் தேதி வரை இருந்த மின்நுகர்வோர்களுக்கு அபராதத் தொகை இல்லாமல் வரும் 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பானது மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x