Published : 10 Dec 2023 05:16 AM
Last Updated : 10 Dec 2023 05:16 AM

பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சிக்கும் திட்டங்கள்: மத்திய அமைச்சர் பெருமிதம்

மயிலாடுதுறை: பிரதமர் மோடியின் ஆட்சியில்,ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனமத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற வாகன யாத்திரை தொடக்கம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டலமேலாளர் ராகேஷ் ஆகியோர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்துவிளக்கினர்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசியதாவது: கடந்த ஒன்பதரைஆண்டுகளில் பிரதமர் மோடியின்ஆட்சியில் பெண்கள், முதியோர், மாணவர்கள், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி.என அனைத்துத் தரப்பு மக்களும்பயனடைந்துள்ளனர். ஒவ்வொருகுடிமகனின் வளர்ச்சிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 80 கோடி மக்களுக்கு,உணவுப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனாலும், திட்டங்களாலும் உலகஅளவில் பொருளாதார ரீதியாகஇந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x