

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறி விக்கப்பட்டும் கடந்த 9 மாதங்களாக அதனை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத் தின்கீழ் பல்வேறு பணிகளில் தமிழகம் முழுக்க 2,600 பேர் தற்காலிக ஊழியர்க ளாகப் பணியாற்றி வருகின்றனர். 2013 நவம்ப ரில் இவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக் கப்பட்டுவிட்ட நிலையில் இன்றுவரை அந்த ஊதிய உயர்வை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட் டுச் சங்கம் வழங்க முன்வரவில்லை. எனவே இந்த பணியாளர்கள் கடும் வேதனைக் கும் அவதிக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதுபற்றி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டுச் சங்கத்தில் பணியாற்றும் சிலர் கூறியதாவது: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின்கீழ் அனைத்து மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் செயல்பட்டு வரு கின்றன. தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் தில் ஆலோசகர், ஆய்வக நுட்பவியலா ளர், செவிலியர், மருந்தாளுநர், மேற்பார்வை யாளர் உள்ளிட்ட பணிகளில் பணியாற்று கின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையம், பால்வினை நோய் சிகிச்சை மையம், கூட்டு மருந்து சிகிச்சை மையம், ரத்த வங்கி ஆகியவற்றில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி தமிழகம் முழுக்க 2600 பேர் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக குறைந்தபட்ச தொகுப்பூதியம் (8000-12,000ரூபாய்) வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் பணியாற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தது. அதன்படி 13,000 முதல் 16,000 ரூபாய் வரை வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்கான நிதியையும் தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் அந்தந்த மாநில எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கங்களுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கடந்த 9 மாதங்களாக ஊதிய உயர்வை அமல்படுத்தவில்லை. இதனால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் தில் 2,600 பேர் பணிபுரிந்தாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்ற காரணத்தைக் கூறி அடிப்படை சலுகைகளை மறுத்து வருகின்ற னர். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களை நிரந் தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும் உதவிட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
காரணம் என்ன?
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் பொறுப்பில் இருந்த விவேகானந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றார். அவருக்குப் பிறகு மகேஸ்வரன் என்பவரிடம் அயல்பணி அடிப்படையில் திட்ட இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட இயக்குநர் பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்று அடிக்கடி மாறுவதாலும், தொடர்புடைய அலுவலத்தின் ஒருசில பணியாளர்களின் அலட்சியத்தாலும்தான் தற்காலிக பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு இன்னும் அமலாகவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.