Published : 09 Dec 2023 06:08 AM
Last Updated : 09 Dec 2023 06:08 AM
கோவை: கோவை-டெல்லி இடையிலான கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், கோவை-லோக்மான்ய திலக், ராஜ்கோட் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஸ்ரீசத்ய சாய் பிரசாந்தி நிலையம்- பசம்பள்ளி ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்க பகுதியில் முக்கிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. எனவே, லோக்மான்ய திலக்-ல் இருந்து கோவை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 11013), வரும் 2024 பிப்ரவரி 7-ம் தேதி வரை குண்டகல்-சேலம் ரயில்நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மேலும், கோவையில் இருந்து லோக் மான்ய திலக் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 11014), வரும் 2024 பிப்ரவரி 8-ம் தேதி வரை சேலம்-குண்டகல் ரயில்நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில்கள், அனந்தபூர், தர்மாவரம், ஸ்ரீசத்ய சாய் பிரசாந்தி நிலையம், இந்துபூர், கவுரிபிதான்பூர், பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட், கேஎஸ்ஆர் பெங்களூரு, ஓசூர், தருமபுரி ஆகிய ரயில்நிலையங்களில் நிற்காது. இதுதவிர, கோவையில் இருந்து ராஜ்கோட் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16614), வரும் 2024 பிப்ரவரி 2-ம் தேதி வரை திருப்பத்தூர்-குண்டகல் ரயில்நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மேலும், ராஜ்கோட்டிலிருந்து கோவை புறப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16613), வரும் 10-ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 4-ம் தேதி வரை குண்டகல்-திருப்பத்தூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில்கள், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், இந்துபூர், தர் மாவரம், அனந்தபூர், கூட்டி ஆகிய ரயில்நிலையங்களில் நிற்காது. திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையம் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16332), இன்று (டிச.9) முதல் 2024 பிப்ரவரி 3-ம் தேதி வரை திருப்பத்தூர்-குண்டகல் ரயில்நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மும்பையில் சிஎஸ்எம்டி ரயில்நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டும் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16331), வரும் 10-ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 4-ம் தேதி வரை தர்மாவரம்-திருப்பத்தூர் ரயில்நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில்கள் இந்துபூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட் ரயில்நிலையங்களில் நிற்காது. கோவை-டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12647), வரும் 10-ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 4-ம் தேதி வரையும், டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன்- கோவை இடையே இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்கள்:12648) வரும் 13-ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 7-ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT