உடல்நலம் பாதித்து மீட்கப்பட்ட சிவகங்கை சாமியார் மருத்துவமனையில் உயிரிழப்பு

சாமியார் சுரேந்தர்
சாமியார் சுரேந்தர்
Updated on
1 min read

சிவகங்கை: உடல்நலம் பாதித்து மீட்கப்பட்ட சிவகங்கை சாமியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை மேலவாணியங் குடியில் மானாமதுரை - தஞ்சை புறவழிச்சாலையில் ஆசிரமம் உள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த சாமியார் சுரேந்தர் பக்தர் களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். இந்நிலையில், சாமியாரை ஜீவ சமாதி அடைய வைக்க முயற்சிப்ப தாகவும், அதற் காக அவருக்கு உணவு வழங் காததால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்ப தாகவும், மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் புகார் தெரி வித்தனர்.

இதையடுத்து, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் மற்றும் போலீஸார் ஆசிரமத் துக்குச் சென்று சாமியாரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று அதிகாலை சாமியார் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரமத்தில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in