எலிக் காய்ச்சல், காலரா பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்துகள்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

எலிக் காய்ச்சல், காலரா பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்துகள்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மழை பாதித்த இடங்களில் எலிக் காய்ச்சல், காலரா பரவாமல் தடுக்க பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்துகளை விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் காலரா, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் கிருமித் தொற்று தடுப்பூசியும் செலுத்த வேண்டும்.

அசித்ரோமைசின், டாக்ஸிசிலின் போன்ற மருந்துகளை வயதுக்கேற்ப பொதுமக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் விநியோகிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in