Published : 13 Jul 2014 10:01 AM
Last Updated : 13 Jul 2014 10:01 AM

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்

காவிரிப் படுகையை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக (காப்புப் படுகை) தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மீத்தேன் திட்டம் விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தைப் பாதிக்கும் பேரழிவுத் திட்டமாகும். எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மணல் குவாரிகள், இறால் பண்ணைகள், குளம் குட்டை களைத் தூர்த்து மனைகளாக்குதல், ஓஎன்ஜிசி மற்றும் தனியார் எரிவாயு மற்றும் எண்ணெய் நிறு வனங்களால் நிலத்தடி நீர் வேதிப் பொருள் மற்றும் உப்புத் தன்மை கொண்டதாக மாறிப் பாழடைதல் எனப் பல வடிவங்களில் காவிரிப் படுகை பாழாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மேலும், காவிரிப் படுகையில் இவை தொடர்ந்தால், விவசாயம் முடிவுக்கு வந்துவிடும். காவிரிப்படுகையில் வேளாண்மை தொடரும் வரைதான் தமிழகத்துக்கு உணவுப் பாதுகாப்பும், தற்சார்பும் இருக்கும். ஆகவே, காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மாநாட்டில் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட்) மீ.தா.பாண்டி யன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தியாகு மற்றும் அமைப்புகளைச் சேர்ந் தோர், விவசாயிகள் பங்கேற்றனர்.

‘மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்’

மாநாட்டைத் தொடங்கி வைத்து பழ.நெடுமாறன் பேசியது:

தண்ணீர் இல்லாமல் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவரும் நிலையில், மேலும் அதை அழிக்கும் முயற்சிதான் மீத் தேன் திட்டம். இந்த முயற்சியை தடுக்க வேண்டும். இந்த போராட் டம் வாழ்வாதாரத்துக்கான போராட் டம், இதை மக்கள் சேர்ந்து முறியடிக்காவிட்டால் எதிர்கால த்தில் இருள்சூழ்ந்து போகும். மீத்தேன் எதிர்ப்பு என்பது இந்த மாவட்ட மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் காப்பாற்றுவதாகும். இதில் ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைவரும் இணைந்து போராடி னால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றார் நெடுமாறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x