மிக்ஜாம் புயல் பாதிப்பு | வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு | வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்
Updated on
1 min read

சென்னை: அரசு பொது காப்பீட்டு நிறுவனமான 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களில் 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோருவதற்கு 71flood23@newindia.co.in என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். மேலும், www.newindia.co.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in