

நாகப்பட்டினம்: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.7.70 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் நாகையில் இருந்து சென்னைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், சமையல் பொருட்கள், போர்வை, தலையணை, புடவை, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. தொடர்ந்து, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
பின்னர், லாரியில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டதையடுத்து ஆட்சியர் வழியனுப்பி வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.