யார் ஆட்சிக்கு வந்தாலும் நிரந்தர தீர்வு இல்லை: தமிழக பாஜக @ சென்னை வெள்ளம்

யார் ஆட்சிக்கு வந்தாலும் நிரந்தர தீர்வு இல்லை: தமிழக பாஜக @ சென்னை வெள்ளம்
Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "மிக்ஜாம் புயல் மழை காரணமாக, சென்னை மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் கையேந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையை தள்ளிவைத்துவிட்டு, அங்கு சென்று நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல கட்சி நிர்வாகிகளும் நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மழைக் காலத்தில் சென்னை வெள்ளத்துக்கு நிரந்தர தீர்வு இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்து, அதில் கமிஷன் பெறுவதை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்காதவாறு எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in