Published : 05 Dec 2023 05:03 AM
Last Updated : 05 Dec 2023 05:03 AM

துபாயில் உலக பருவநிலை மாநாடு: இலங்கை அதிபர் ரணிலுடன் சத்குரு கலந்துரையாடல்

துபாயில் நடந்த உலக பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மண் வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாடிய ஈஷா நிறுவனர் சத்குரு.

கோவை: உலக பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை அதி பர் ரணில் விக்ரமசிங்கவுடன், மண் வளப் பாதுகாப்பு குறித்து ஈஷா நிறுவனர் சத்குரு நேரில் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக, ஈஷா நிறுவனர் சத்குரு தனது `எக்ஸ்' வலைதளப் பக்கப் பதிவில் கூறியி ருப்பதாவது:

இலங்கை அதிபர் ரணில் விக்ர மசிங்கவுடன் மண் வளத்தைப் பாதுகாப்பது குறித்தும், வெப்ப மண்டல நிலப் பகுதிகளில் அதன் தொடர்பு குறித்தும் ஓர் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நிகழ்த் தினேன்.

இவ்விஷயத்தில் சரியாக கவனம் செலுத்துவதன் மூலம் இலங்கையின் வளமான மண் மற்றும் பொருத்தமான பருவ நிலையால், அந்நாட்டுக்கும், அந்நாட்டு விவசாயிகளுக்கும் ஒரு வளமான சூழலை உருவாக்க முடியும், என பதிவிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த உலக பருவநிலை மாநாடு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மண் காப்போம் இயக் கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு மண் வளப் பாதுகாப்பு குறித்து பல்வேறு அமர்வுகளில் சிறப்புரையாற்றி வருகிறார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற தொடக்க விழா நிகழ்விலும் ஈஷா நிறுவனர் சத்குரு பங்கேற்றது குறிப்பி டத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x