

வேலூர்: வேலூர் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோத னையில் கணக்கில் வராத ரூ.1.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றுபவர் ராமு (52). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையிலான குழு வினர் நேற்று பேரூராட்சி அலு வலகத்தில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியதாவது:
செயல் அலுவலர் ராமு கடந்த 5 மாதங்களில் பேரூராட்சியின் பணம் ரூ.30 லட்சத்தை செலவு செய்துள்ளார். இதை யாரும் கேட்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு கமிஷன் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை வாங்க வந்தபோது நடத்திய சோத னையில் பேரூராட்சித் தலைவர் சத்தியாவதியின் கணவர் பாஸ் கரனிடம் இருந்து ரூ.55 ஆயிரம், 2 கவுன்சிலர்களிடம் இருந்து தலா ரூ.10 ஆயிரம் மற்றும் அலு வலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின்போது ஹார்டு வேர் கடைகளின் பூர்த்தி செய்யப்படாத பில்கள் பறிமுதல் செய்யப் பட்டன. முறைகேடுகள் குறித்து செயல் அலுவலர் ராமு மீது நட வடிக்கை எடுக்கப்படும், என்றனர்.