Published : 05 Dec 2023 04:10 AM
Last Updated : 05 Dec 2023 04:10 AM
மதுரை: மதுரை மாநகராட்சி 100 வார்டு களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய்களை உடன டியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில், அக்கட்சி கவுன்சிலர்கள் மேயர் இந்திராணி, ஆணையர் லி.மதுபாலான் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் தி. நாகராஜன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் விஜய ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா, வை.ஸ்டாலின், வி.கோட்டைச்சாமி, ஏ பாலு, ஜெ.லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் பிரதானமாக உள்ள கிருதுமால் நதி, சிந்தாமணி வாய்க்கால், பந்தல்குடி கால்வாய், அனுப்பானடி வாய்க்கால், மாடக்குளம் கண்மாயில் இருந்து வரும் வாய்க்கால்கள், அண்ணா நகர் செண்பகத் தோட்டம் ஆகிய கால்வாய்களை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும். செல்லூர் - குலமங்கலம் சாலை, திருப்பரங்குன்றம் பிரதான சாலை பைகாரா பகுதி,
அழகப்பன் நகர் பகுதி பிரதான சாலை, பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதி, கோச்சடை, சம்மட்டிபுரம், கிருதுமால் நதி பாம்பன் சாலை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு சாலை, அண்ணா பேருந்து நிலையம் அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள ஆதிமூலம் பிள்ளை சந்து, தானப்பா முதலி தெரு உள்ளிட்ட சுமார் 25 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்திட வேண்டும்.
பைபாஸ் சாலை, தீக்கதிர் அலுவலகச் சாலை, சிம்மக்கல் பகுதி தைக்கால் தெரு செட்டியார் தோப்பு பகுதி, ராஜா மில் சாலை, அனுப்பானடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கோச்சடை முத்தையா கோயில் தெரு, நரிமேடு பகுதி, காஜிமார் தெரு என்று 15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். விளாங்குடி பகுதி, திரு.வி.க. பள்ளி, வைகை ஆறு தென்கரை பகுதி இணைப்பு சாலை, செல்லூர் அய்யனார் கோயில் தெரு, ஆரப்பாளையம் கேப்ரன்ஹால் பள்ளி உள்ளிட்ட இடங்களில் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.
வார்டு 21 - அண்ணா நகர் மற்றும் பெரியார் தெரு, சிஏஎஸ் காலனி, 52-வது வார்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, 63, 64, 65 மற்றும் 73 ஆகிய வார்டுகளில் உள்ள தெருக்கள், 76- வது வார்டு மேலவாசல் பகுதி, 84 வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீரமைத் திட வேண்டும். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT