வந்தவாசி  அடுத்த ராமசமுத்திரம் கிராம முகாமில் நேற்று நிவாரண  பொருட்களை வழங்கிய வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி.
வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராம முகாமில் நேற்று நிவாரண பொருட்களை வழங்கிய வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி.

மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 முகாம்களில் 126 பேர் தங்கவைப்பு

Published on

திருவண்ணாமலை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 நிவாரண முகாம்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 38 சிறுவர்கள், 49 பெண்கள், 39 ஆண்கள் உட்பட 126 பேர் பாதுகாப்பாக தங்க வைக் கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தை மிக்ஜாம் புயலால், சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மிதமான காற் றுடன் கூடிய மழைசாரல் இருந்தது. காஞ்சிபுரம், செங்கல் பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களையொட்டி உள்ள செய்யாறு வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

மேலும், மாவட்டம் முழுவதும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி, வந்தவாசி அடுத்த விளாங் காடு அரசுப் பள்ளி, சளுக்கை அரசுப் பள்ளி, ராமசமுத்திரம் அரசுப் பள்ளி என 3 நிவாரண முகாம்களில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆண்கள், 41 பெண்கள், 30 சிறுவர்கள் என 99 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு உணவுப் பொட்டலங்கள், வேட்டி, சேலை, பாய், தலை யணை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னு சாமி தலைமையிலான வருவாய்த் துறையினர் வழங்கினர்.

இதேபோல், கண்ணமங்கலம் அரசுப் பள்ளி நிவாரண முகாமில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆண்கள், 8 பெண்கள், 8 சிறுவர்கள் என மொத்தம் 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு தேவையான உணவு, பாய் மற்றும் உடை ஆகியவற்றை கோட்டாட்சியர் தனலட்சுமி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 நிவாரண முகாம்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆண்கள், 49 பெண்கள், 38 சிறுவர்கள் என 126 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

வெம்பாக்கத்தில் 47 மி.மீ.,: திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று காலை நில வரப்படி வெம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 47.1 மி.மீ., மழை பெய்துள்ளது. செங்கத்தில் 9, திருவண்ணாமலையில் 2.6, போளூரில் 9.8, ஆரணியில் 17.4, ஜமுனா மரத்தூரில் 9, கலசப்பாக்கத்தில் 10.2, தண்டராம் பட்டில் 9.2, செய்யாறில் 23.4, வந்த வாசியில் 36.3, சேத்துப்பட்டில் 12.6 மழை பெய்துள்ளன. மாவட்டத்தில் சராசரியாக 16 மி.மீ., மழை பெய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in