

சென்னை: தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு முகாம் இன்றும் (டிச. 3-ம் தேதி) தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 6-வது வாரமாக நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்காலசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதேபோல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய குடும்ப உறுப்பினர்களை சேர்க்கவும், பழைய காப்பீட்டு அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு சிறப்பு முகாம் நடந்தது. ராயபுரம்மற்றும் நீலாங்கரை பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்புமுகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தொடர்ந்து 10 வாரங்கள்சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்கால நோய்களுக்கான பாதிப்புகளுக்கு இம்மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் 5 இடங்கள் உட்படதமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு முகாம் இன்றும் (டிச. 3-ம்தேதி) தொடர்ந்து நடைபெறவுள்ளது.
அதிமுகவுக்கு தகுதியில்லை: மழைக்கால பாதிப்புகள் குறித்து பேசுவதற்கு அதிமுகவினருக்கு தகுதியில்லை. 2015-ம்ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல்திறந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான குடிசைகள் நீரில் மூழ்கின. இத்தகையசெயலை செய்த அதிமுக ஆட்சியினர். இந்த மழையை பற்றி பேசுவதற்கு தகுதிஇல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.