Published : 03 Dec 2023 05:13 AM
Last Updated : 03 Dec 2023 05:13 AM
சென்னை: பதிவுத்துறை சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழுவின் முதல்அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறையில் பின்பற்றப்படும் சொத்துகளுக்கான சந்தைவழிகாட்டி மதிப்பை சீரமைக்க, சந்தை வழிகாட்டி மதிப்பு தொடர்பாக களநிலவரம் பற்றி ஆராய்ந்துவழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க ஓர் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று 2021-2022-ம்ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரு அடுக்குகளுடன் (முதல் அடுக்கு - உயர்மட்டக்குழு, இரண்டாவது அடுக்கு - வழிகாட்டும் குழு) கூடிய சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன. சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழுவின் முதல்அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜோதி ஜெகநாதன் கடந்த மே மாதம் 22-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 3-ம் தேதி அப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அப்பொறுப்பில்ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிஆர்.வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தை வழிகாட்டி மதிப்புசீரமைப்புக்குழுவின் முதல் அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஆர்.வாசுகி கடந்த 1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான உயர்மட்ட குழுவானது வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து அதனை நேர் செய்யஉரிய பரிந்துரைகளை பதிவுத்துறைக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT