

மதுரை: அமலாக்கத் துறையினர் மன உளைச்சலை ஏற்படுத்தி லஞ்சம் பெறுகின்றனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
காரைக்குடி, திருப்பத்தூர் தொகுதிகளைச் சேர்ந்த காங்கி ரஸ் சமூக ஊடகப் பேரவை பொறுப் பாளர்கள் கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி.செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கி கைதானது எனக்கு வியப்பாக இல்லை. ஊழல் அதி காரிகள் நிறைந்த அமைப்புதான் அமலாக்கத் துறை. கருப்பு பண ஒழிப்புச் சட்டத்தில், சம்பந் தப்பட்டவர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவர்களுடன் தொடர்பில் இருந்ததொழிலதிபர்களுக்கும் சம்மன்அனுப்பி, மன உளைச்சலை ஏற்படுத்தி லஞ்சம் வாங்குகின்றனர்.
அமலாக்கத் துறையே தேவை யற்றது. சிபிஐ-ல் உள்ள பொரு ளாதாரக் குற்றப் பிரிவே சிறப்பாக செயல்படுகிறது. அதுவே போதும். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன். இதேபோல மற்ற மாநிலங்களிலும், அமலாக்கத் துறையில் உள்ள ஊழல் அதிகாரிகளை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று, பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்.
பஞ்சாப் மாநில ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த அறிவு ரையை, தமிழக ஆளுநரும் கடைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆளுநரை, குடியரசுத் தலைவர் வாபஸ் பெற வேண்டும்.