Published : 02 Dec 2023 06:08 AM
Last Updated : 02 Dec 2023 06:08 AM

பொள்ளாச்சி அருகே அறங்காவலரை மாற்ற வலியுறுத்தி அறநிலையத் துறை அதிகாரிகளை மக்கள் முற்றுகை

பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூராம்பாளையம் அம்மணீஸ்வரர் கோயில் அறங்காவலரை மாற்ற வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். படம்: எஸ்.கோபு

பொள்ளாச்சி: கிட்டசூராம்பாளையம் அம்மணீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவரை மாற்ற வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூராம்பாளையம் ஊராட்சியில் பழமை வாய்ந்தஅம்மணீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 11.02 ஏக்கர் நிலம் உள்ளது.அந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான பொது ஏலம் நேற்று நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த கோயிலுக்கு சமீபத்தில் ரத்தினவேலு என்பவர் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு, கிராம மக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ரத்தினவேலை அறங்காவலராக நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

உள்ளூரில் உள்ள தகுதி வாய்ந்த நபரை அறங்காவலராக நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அறங்காவலர் ரத்தினவேல், இந்து சமய அறநிலையத் துறை பொள்ளாச்சி சரக ஆய்வாளர் பாக்கியவதி மற்றும் அதிகாரிகள், கோயில் நிலத்தை பொது ஏலம் மூலமாக குத்தகைக்கு விட நேற்று கிட்டசூராம்பாளையம் வந்தனர். கோயிலுக்குள் செல்ல முயன்றஅவர்களை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள்முற்றுகையிட்டனர். அறங்காவலரை மாற்றாமல் கோயிலில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் சென்று, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பொது ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். இதை ஏற்று, பொதுமக்கள் சமாதானமடைந்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அதிகாரிகள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x