

துக்ளக் ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இவர் நரம்பியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் திங்கள்கிழமை இரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.