மாற்றுத் திறனாளிகள் தின விழா தள்ளிவைப்பு

மாற்றுத் திறனாளிகள் தின விழா தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக மாற்றுத் திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர்3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, டிச.2-ம் தேதி (இன்று) காலை 10.30 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

தற்போது, டிசம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை சென்னையில் புயல் மற்றும் கனமழை குறித்துஇந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது. இதன் காரணமாக, முதல்வர் தலைமையில் இன்று நடைபெற இருந்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா தள்ளி வைக்கப்படுகிறது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in