

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம் காரண மாக நேற்று பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண் டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று, டிச.3-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். மேலும் வடமேற்குத் திசையில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத் துக்கும் இடையே டிச.4-ம் தேதி மாலை கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள் ளனர். இதைத் தொடர்ந்து நேற்று பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.