Published : 31 Jan 2018 11:10 AM
Last Updated : 31 Jan 2018 11:10 AM

பொதுமக்களிடம் போலீஸார் கனிவாக நடக்க வேண்டும்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

பொதுமக்களிடம் அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகளும் காவலர்களும் பரிவோடும், கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி மணிகண்டன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் சில தினங்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்தாரர்கள், பாதிக்கப்பட்ட மக்களிடம் போலீஸார் சில நேரங்களில் கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், ‘அனைத் துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகளும், காவலர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பரிவோடும், கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும். அதேபோல் சட்டத்தை மீறுபவர்கள் மீது உறுதியான, ஆனால் மனிதநேயத் தோடு கூடிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x