Published : 01 Dec 2023 04:22 AM
Last Updated : 01 Dec 2023 04:22 AM
திருநெல்வேலி: பாளையங்கால்வாயின் கடைசி குளமான நொச்சிகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. நிரம்பியிருக்கும் குளத்தில் குளிக்க வாங்க என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பொதுமக்களுக்கு சிலர் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடிக் காக பாபநாசம் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுக்க உள்ள கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடிக்கு திருநெல்வேலி மற்றும் பாளையங்கால்வாய்கள் விவசாயிகளுக்கு கைகொடுக் கின்றன.
பழவூர் தடுப்பணை பகுதி யிலிருந்து பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ள நிலையில் அதனால் நீர்வரத்து பெறும் குளங்கள் நிரம்பி வருகின்றன. அந்தவகையில் இந்த கால்வாயின் கடைசி குளமான நொச்சிக்குளம் தற்போது நிரம்பி மறுகால் பாய்கிறது. இவ்வாண்டு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதிலிருந்து குறுகிய நாட்களிலேயே இந்த குளம் நிரம்பியிருப்பது இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயி களுக்கும், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குளம் நிரம்பியிருப்பதால் இதை சுற்றியுள்ள பகுதிகளில் கார் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘நொச்சிகுளம் நிரம்பிடுச்சு, அனைவரும் குடும்பத்துடன் குளிக்க வாங்க’ என்று குளத்தின் படங்களுடன் சமூக வலைதளங்களில் சிலர் அழைப்பு விடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இது தொடர்பாக நொச்சிகுளம் ஊராட்சி தலைவர் எஸ். வேலம்மாள் சீனிவாசன் கூறியதாவது: இவ்வாண்டு பாளையங்கால் வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட குறுகிய நாட்களிலேயே குளம் நிரம்பியிருக்கிறது. இதற்காக குளத்தை முன்கூட்டியே தயார் படுத்தி வைத்திருந்தோம். குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்த முட்செடிகளை அகற்றியுள்ளோம். மேலும் மடைகளிலும், கரை களிலும் இருந்த குப்பைகள், கழிவுகள், பாட்டில்களையும் அகற்றியுள்ளோம். குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை தூர்வாரி வைத்திருந்ததால் தண்ணீர் விரைவாக வந்து குளம் பெருகியது.
இந்த குளம் பெருகியிருப்பதால் சுற்றுவட்டாரத்திலுள்ள 19 கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும்போது விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் பலர் குடும்பத்துடன் இங்கு வந்து குளிப்பார்கள். தற்போது குளம் நிரம்பி மறுகால் பாய்வதால் குளிப்பதற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்களில் இயற்கை ஆர்வலர்கள் கருத்துகளை பதிவிடு கிறார்கள் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT