Published : 28 Jan 2018 08:22 AM
Last Updated : 28 Jan 2018 08:22 AM

ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, இரு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் கேப்ரியேல். பின்னர் இவர் தருமபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி கடந்த 2003-ல் ஓய்வு பெற்றார். ராணுவ வீரருக்கான ஓய்வூதியம் பெற்ற இவர், போக்குவரத்துக் கழகத்திலும் ஓய்வூதியம் பெற்றார்.

கடந்த 2012-ல் கேப்ரியேல் மரணமடைந்தார். அதன்பிறகு ராணுவம் சார்பில் அவரது மனைவி அமலோற்பவத்துக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, போக்குவரத்துக் கழகம் திடீரென ஓய்வூதியத்தை நிறுத்தியது.

இதை எதிர்த்து அமலோற்பவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ‘‘ஏற்கெனவே ஒரு ஓய்வூதியம் பெறுபவர், மற்றொரு ஓய்வூதியம் பெற எந்தத் தடையும் இல்லை. எனவே, இறந்த கேப்ரியேலின் மனைவிக்கு 4 வாரத்தில் போக்குவரத்துக் கழகம் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும்’’ என உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x