Published : 30 Nov 2023 04:04 AM
Last Updated : 30 Nov 2023 04:04 AM
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் கர்ப்பிணிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப் படுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் (டிபிஎச்) மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கான மடிக்கணினி களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து கர்ப்ப கால நீரிழிவு நோய் செயல்பாட்டு வழிகாட்டி கையேடு மற்றும் பதாகையை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மடிக்கணினிகள் வழங்கல் - தமிழகத்தில் 1,807 ஊரக சுகாதார நிலையங்களுக்கும் 42 மாவட்ட தாய் சேய் நல அலுவலர்களுக்கும் தலா ஒரு மடிக் கணினி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 1,852 அலுவலர்களுக்கு ரூ.15.92 கோடி மதிப்பீட்டில் மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மடிக் கணினிகள் வழங்குவதன் மூலம்தாய்சேய் நல பாதுகாப்பு அலுவலர்கள் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகளின் நலனை கண்காணித்து எடை, பிபி, ஹீமோகுளோபின் அளவைபதிவிடுவதற்கு பெரிய அளவில் பயன்படும். கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது கருவுற்ற தாய்மார்களின் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
உலகளவில் கர்ப்பிணிகளில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 7 முதல் 10 ஆகும். தமிழகத்தில் ஆண்டுக்கு 9.25 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்வாக நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்களுடன் கர்ப்பக் கால நீரிழிவு நோய் பற்றிய புதிய வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளடக்கிய புத்தகம் மருத்துவர்களின் வசதிக்காக தற்சமயம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் இதனை தெரிந்து கொள்ளும் வகையில்தமிழில் விரைவில் வெளியிடப்படும். புது வைரஸ் தாக்கம் இல்லை: பொது சுகாதாரத்துறை சார்பாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக குழந்தைகளை மிக கவனமாக கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.
புதிய வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை. என்றாலும், மழைக்கால நோய்கள் என்கின்ற வகையில் இன்புளூயன்சா, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கொசு பெருக்கத்தை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது,புகை மருந்து அடிப்பது போன்ற அனைத்து பணிகளும் நடைபெறுகின்றன. மழைக்காலங் களில் டெங்கு போன்ற நோய்கள்அதிகரிப்பதன் காரணம் நீர்த் தேக்கம் அதிகமாக இருப்பது தான். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT