

மதுரை: மதுரை மாநகராட்சி சாலைகளில் சேறும், சகதியுமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் மீன் குஞ்சுகளை விட்டும், நாற்றுகளை நட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடி ராமமூர்த்தி நகர், கிருஷ்ணா தெருவில் தற்போது பெய்துவரும் மழையால் சாலைகள் சேறும் சகதியமாக உள்ளது. அப்பகுதி மக்கள், 20 நாட்களுக்கு மேலாக புகார் தெரிவித்தும் மநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிருப்தியடைந்த பொதுமக்கள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சேறும் சகதியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்நகர் புகுதியில் 10 நாட்களாக தண்ணீர் தேங்கி, (கொசு, டெங்கு நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள) பல முறை புகார் தெரிவித்தும் தண்ணீரை வெளியே எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொன்நகர் பகுதி மக்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கவுன்சிலர் சி.நாகஜோதி சித்தன், அதிமுக பகுதி கழகச் செயலாளர் சித்தன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களின் இந்த நூதனப் போராட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வுக்கு சென்றுள்ளனர்.