

இந்தியாவின் பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர்கள் உருவாக்கிய ரேஸ் கார்களுக்கான பந்தயம் இருங் காட்டுக்கோட்டை ரேஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்து.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பில் அவ்வப்போது பைக் மற்றும் கார் பந்தயங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிக்கும் மாணவர்கள் உருவாக்கிய ரேஸ் கார்களுக் கான பந்தயம் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
இந்த பந்தயத்தில் பங்கேற்பதற் காக இந்தியா முழுவதிலுமிருந்து 100-க்கும் அதிகமான கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது கார்களுடன் வந்து பந்தயத்தில் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர். இதில் தகுதியான 87 கல்லூரி மாணவர் கள் இந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிக்கும் 25 பேர் கொண்ட குழு இந்த கார்களை உருவாக்கியது.
இதில் 2 மாணவிகள் குழுவும் அடக்கம். கடந்த 18-ம் தேதி தொடங்கி மூன்று நாட்களாக நடந்த கார் பந்தயம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைcந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி சுற்று பந்தயத்தில் தமிழகத் திலிருந்து கோவை பி.எஸ்.ஜி கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி, சேலம் சோனா கல்லூரிகளும் வட மாநிலங்களில் புனே, டெல்லி, ரூர்கேலா போன்ற ஊர்களில் உள்ள 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
இதில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய கார் முதலிடத்தை பிடித்தது, அவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.