

வேலூர் மாவட்டம் திருப்பத் தூரை சேர்ந்தவர் முருகன் (29). இவர் சிங்கப்பூர் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தார். விமான நிலையத் துக்குள் வந்த அவரை உறவினர் கள் சிலர் தடுத்து நிறுத்தினர். ‘‘உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளோம். திருமணம் முடிந்த பிறகுதான் சிங்கப்பூர் செல்ல வேண்டும்’’ என்று கூறினர். முருகன் மறுத்தார். உறவினர் களும் விடாப்பிடியாக அதையே திரும்பத் திரும்ப கூறினர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, ‘‘என்னை சிங்கப்பூர் போகவிடுங்கள்’’ என்று கூறிய படியே அவர்களிடம் இருந்து தப்பிய முருகன், மாடியில் உள்ள பயணிகள் அறைக்கு ஓடிச் சென்றார்.
அதற்குள் அவர் செல்ல வேண்டிய சிங்கப்பூர் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டது. இதனால் விரக்தியடைந்த முரு கன் பயணிகள் அறை மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயம் அடைந்து வலியால் துடித்த அவருக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.