

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் மலையோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. திற்பரப்பு, களியலில் தலா 21 மிமீ மழை பெய்துள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் 44 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 370 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 329 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 15.81 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 109 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறில் 54.12 அடி தண்ணீர் இருந்தது. முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.