Published : 28 Nov 2023 04:00 AM
Last Updated : 28 Nov 2023 04:00 AM
கோவை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையே நவ. 28-ம் தேதி ( இன்று ) முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கோவை - சென்னை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்:06035 ), சென்னை சென்ட்ரல் இருந்து இன்று முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06036 ), கோவையில் இருந்து இன்று முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். 8 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT