Published : 28 Nov 2023 05:30 AM
Last Updated : 28 Nov 2023 05:30 AM

46-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: அமைச்சர் உதயநிதிக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது 46-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சென்னையில் நேற்று நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, போக்குவரத்துத் துறைஅமைச்சர் சா.சி.சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாதவரம் எம்எல்ஏ எஸ்சுதர்சனம், சென்னை வடகிழக்கு மாவட்டதகவல் தொழில்நுட்ப அணிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.சீனிவாசன், மாவட்டஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர்ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர்வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வந்தே மாதரம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் உமாமகேஸ்வரி வந்தேமாதரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பிலும் வாழ்த்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x