Published : 27 Nov 2023 05:04 AM
Last Updated : 27 Nov 2023 05:04 AM

அரசியலமைப்பை நிறுவியவர்களுக்கு நன்றி: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் அரசியலமைப்பு தின வாழ்த்து

சென்னை: அரசியலமைப்பு தினத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவ.26-ம் தேதிகொண்டாடப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு தினத்தையொட்டி தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அரசியலமைப்பு தினத்தில் பாபா சாஹேப் மற்றும் அரசியலமைப்பை நிறுவிய தலைவர்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவிப்போம். இந்த நாள் குடிமக்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றவும், அடிப்படை கடமைகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணிக்கவும் வகை செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இந்தச் சிறப்புமிகு அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம். அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், அரசியலமைப்புச் சபையின் தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தி, நமது அரசியலமைப்பு சட்டத்தின் உன்னதங்களை நிலைநிறுத்த உறுதிமொழி எடுப்போம்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு மாற்றாக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய ஜனநாயகக் கருத்தியலை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உறுதிசெய்த அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளை பாதுகாத்திட உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x