பெண்களிடம் வயது, சாதி கேட்ட விவகாரம்; இலவச பேருந்து திட்டத்தை செம்மைப்படுத்தவே ஆய்வு: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

பெண்களிடம் வயது, சாதி கேட்ட விவகாரம்; இலவச பேருந்து திட்டத்தை செம்மைப்படுத்தவே ஆய்வு: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் அவர்களது பெயர், வயது, சாதி உள்ளிட்ட புள்ளி விவரங்களை சேகரிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை:

சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும்போது, அந்த திட்டம் மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்று ஆராய்ந்து, அதை இன்னும் செம்மைப்படுத்த முனைவதுஅரசின் கடமை. அந்த வகையில்தான் மாநில திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த ஆய்வின் முடிவில், கட்டணமில்லா பயணம் மூலம் சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.88 பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரியவந்தது. அதன் அடுத்தகட்ட ஆய்வுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகையவருவாய் உள்ளோருக்கு இந்ததிட்டம் பயன்படுகிறது என்றுஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அறிந்து, அதை இன்னும் கூர்மைப்படுத்துவதுதான் இதன் நோக்கம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in