கனமழை பாதிப்பு: நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 68 வீடுகள் சேதம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

உதகை: வடகிழக்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் தலைமைவகித்து பேசும்போது, "வடகிழக்குபருவமழை இந்த ஆண்டு 1-10-2023முதல் 24-11-2023 வரை 397 மில்லி மீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை 402 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட ஒரு சதவீதம் அதிகம். 2022-ம் ஆண்டு 297 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இந்த ஆண்டு 402 மில்லி மீட்டர் பெய்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பருவமழைக்கு இதுவரை ஒரு வீடு முழுமையாகவும், 68 வீடுகள் பகுதி அளவும் சேதமடைந்துள்ளன. உறவினர்கள் யார் என்று தெரியாத நிலையில், மின்னல் தாக்கி இறந்த வட மாநிலத்தவரின் உடல், மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in