மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.29 வரை அவகாசம் நீட்டிப்பு

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.29 வரை அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த அடுத்த ஆண்டு பிப்.29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு செய்து, கடந்த செப்.4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம். எஞ்சிய அனுமதியற்றமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ளக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பைதவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in