சென்னை | உடற்பயிற்சியின்போது மயங்கி விழுந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு

சென்னை | உடற்பயிற்சியின்போது மயங்கி விழுந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியை சேர்ந்தவர் அன்விதா (26). தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வதை அன்விதா வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 22-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். அன்விதா மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோர் மகளின் உடலை பெற்றுச் சென்று இறுதிச் சடங்கு செய்தனர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் கூறும்போது, ‘‘மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். பெற்றோரும் மகளின் உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர். மருத்துவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இறப்பில் சந்தேகம் இல்லை. அதனால், விசாரணை நடத்தப்படவில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in