Published : 09 Jan 2018 09:56 AM
Last Updated : 09 Jan 2018 09:56 AM

கட்சி பெயர் அறிவிப்பு இப்போது இல்லை: ரஜினிகாந்த் தகவல்

கட்சியின் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார்.

அதன் முதல்கட்டமாக ரசிகர் மன்றங்களை இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக தனி இணையதளத்தையும் தொடங்கியுள் ளார்

இந்நிலையில், மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் கலந்துகொண்ட ரஜினி, ‘‘என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை’’ என்று பேசினார். நட்சத்திர கலை விழாவை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் ரஜினியிடம் ‘‘கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிவிப்பு எப்போது இருக்கும்?’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘கட்சியின் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x