

திருநெல்வேலியில் போதைக்கு அடிமையான 60 வயது முதிய வரின் தலையில் மந்திரவாதி ஆணி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல் லூரியில் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணி அகற்றப்பட்டது.
திருநெல்வேலி டவுனை சேர்ந்த வர் சொக்கலிங்கம் (60). கஞ் சாவுக்கு அடிமையான இவரை குணப்படுத்த, பல்வேறு கோயில் களுக்கும் குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அவருக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து, மந்திரவாதி ஒருவரிடம் இரு வாரங்களுக்கு முன் அழைத்து சென்றனர். பூஜைகள் செய்து, அவரது உச்சந்தலையில் ஆணி அடித்தால், அவரை பிடித்திருக் கும் பேய் ஓடிவிடும் என்று கூறிய மந்திரவாதி, அதற்காக பணத் தையும் கறந்திருக்கிறார்.
சொன்னபடி, அண்மையில் சொக்கலிங்கத்தின் தலையில் 3 இஞ்ச் ஆணியை மந்திர வாதி அடித்திருக்கிறார். அதன் பின், சொக்கலிங்கம் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. தலை யில் ஆணி அடித்ததால் ஏற் பட்ட வலியால் அவர் துடித் தார். அப்போதெல்லாம் வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத் திருக்கிறார்கள். இந்நிலையில் அவரது இடது கை மற்றும் கால் செயலிழந்தது.
பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள் ளனர். அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் மருத்து வர்களுக்கும், சொக்கலிங்கத்தின் உறவினர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
சொக்கலிங்கத்தின் தலையில் மண்டை ஓட்டை உடைத்துக் கொண்டு, மூளைக்குள் 3 இஞ்ச் ஆணி இறங்கியிருந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் ஆணியை அப்புறப்படுத்த மருத்துவ நிபு ணர் ஜோயல் தனபாண்டியன் தலைமையிலான மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அதன்படி 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் தலையிலிருந்து ஆணி அகற்றப்பட்டது.
கடந்த 2 வாரத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது சொக்கலிங்கம் தேறியி ருப்பதாக மருத்துவ கல்லூரி டீன் எல்.டி.துளசிராம், புதன் கிழமை தெரிவித்தார். மூட நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இல்லையா என கேள்வி எழுப்பு கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆணி அடித்த மந்திரவாதி மீது சொக்கலிங்கத்தின் குடும் பத்தினர் போலீஸில் புகார் ஏதும் அளிக்கவில்லை.