

அறுவடைப் பருவம் முடிந்ததையடுத்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார் க்கெட்டில் கிலோ ரூ.40-ஐ எட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மைசூர் மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சென்னைக்கு தக்காளி கொண்டுவரப்பட்டது. இதனால் விலை குறைந்து கிலோ ரூ.8 வரை விற்கப்பட்டது.
தற்போது அறுவடைப் பருவம் முடிந்துவிட்டதால் தக்காளி உற்பத்தி குறைந்தி ருப்பதாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை பிரிவு தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி சென்னைக்கு 300 டன் அளவில் வந்து கொண்டிருந்த தக்காளி, தற்போது 100 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 80 டன் தக்காளிதான் வந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது.