Published : 10 Jan 2018 05:15 PM
Last Updated : 10 Jan 2018 05:15 PM

சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலுக்கான துணைப் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் இன்று ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள ஜன.3 2018 வரையிலான 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2018-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 3 அன்று வெளியிடப்பட்டன.

2018 ஜனவரி 1 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 2018 அக்டோபர் 03 முதல் 2017 டிச.15 முடியப் பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டிற்கான துணைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துணைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும்www.elections.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் பார்த்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு அக்.03 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்:

ஆண்கள் 18 லட்சத்து 76 ஆயிரத்து 652 பேர், பெண்கள் 19 லட்சத்து 24 ஆயிரத்து 366 பேர், இதரர் 901 பேர். மொத்த வாக்காளர்கள் 38 லட்சத்து ஆயிரத்து 919 பேர்.

2017-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் தொடர்பாக 41,485 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில் 879 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்றுக்கெள்ளப்பட்ட மனுக்கள் 82,666. அதன் விவரம் கீழ்வருமாறு:

ஆண்கள் 20 ஆயிரத்து 277 பேர், பெண்கள் 20 ஆயிரத்து 309 பேர், இதரர் 20 பேர். மொத்தம் 40 ஆயிரத்து 606 பேர்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக் கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 2252 ஆகும். அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2155 ஆகும். மேலும் 3 லட்சத்து 10 ஆயிரத்து 235 பேர் பெயர்கள் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்பட்டன. அவ்வாறு வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை விவரங்கள்:

ஆண்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 792 பேர், பெண்கள் 1 லட்சத்து 55 ஆயிரத்து 501 பேர், இதரர் 97 பேர். மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர்.

இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்களது எண்ணிக்கை விவரங்கள்

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்: ஆண்கள் 1,09,605 1,15,867 இதரர் 94 மொத்தம் 2,25,566

2. பெரம்பூர்: ஆண்கள் 1,48,944 பெண்கள் 1,51,856 இதரர் 44 மொத்தம் 3,00,844 பேர்

3. கொளத்தூர்: ஆண்கள் 1,27,603 பெண்கள் 1,31,983 இதரர் 61 மொத்தம் 2,59,647 பேர்

4. வில்லிவாக்கம்: ஆண்கள் 1,19,753 பெண்கள் 1,23,278 இதரர் 56 மொத்தம் 2,43,087 பேர்

5. திரு.வி.க.நகர் (தனி): ஆண்கள் 1,02,488 பெண்கள் 1,08,187 இதரர் 46 மொத்தம் 2,10,721 பேர்

6. எழும்பூர் (தனி): ஆண்கள் 88,005 பெண்கள் 89,448 இதரர் 35 மொத்தம் 1,77,488 பேர்

7. ராயபுரம்: ஆண்கள் 85,013 பெண்கள் 88,352 இதரர் 45 மொத்தம் 1,73,410 பேர்

8. துறைமுகம்: ஆண்கள் 86,641 பெண்கள் 78,921 இதரர் 48 மொத்தம் 1,65,610 பேர்

9. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி: ஆண்கள் 1,11,050 பெண்கள் 1,15,150 இதரர் 27 மொத்தம் 2,26,227 பேர்

10. ஆயிரம் விளக்கு: ஆண்கள் 1,14,434 பெண்கள் 1,19,297 83 மொத்தம் 2,33,814 பேர்

11. அண்ணா நகர்: ஆண்கள் 1,36,914 பெண்கள் 1,40,831 இதரர் 70 மொத்தம் 2,77,815 பேர்.

12. விருகம்பாக்கம்: ஆண்கள் 1,31,104 பெண்கள் 1,30,849 இதரர் 72 மொத்தம் 2,62,025 பேர்

13. சைதாப்பேட்டை: ஆண்கள் 1,30,644 பெண்கள் 1,34,049 இதரர் 68 மொத்தம் 2,64,761

14. தியாகராயநகர்: ஆண்கள் 1,11,992 பெண்கள் 1,14,086 இதரர் 38 மொத்தம் 2,26,116

15. மயிலாப்பூர்: ஆண்கள் 1,25,524 பெண்கள் 1,32,885 இதரர் 34 மொத்தம் 2,58,443 பேர்

16. வேளச்சேரி: ஆண்கள் 1,46,938 பெண்கள் 1,49,327 இதரர் 80 மொத்தம் 2,96,345

மொத்த வாக்காளர்கள்: ஆண்கள்18,76,652 பெண்கள் 19,24,366 இதரர் 901 மொத்தம் 38,01,919 பேர்

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினைவிட 2,71,784 குறைவு என்றும், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைவிட 6.67 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த சுருக்கமுறைத் திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 35,194 ஆகும். இதுவரை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும்.

18 மற்றும் 19-வயது பூர்த்தியடைந்த இறுதி திருத்தப் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், தேசிய வாக்காளர் தினமான 25.01.2018 அன்று சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையங்களில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x