Published : 23 Nov 2023 06:11 AM
Last Updated : 23 Nov 2023 06:11 AM

திருவந்தவார் நடுநிலைப் பள்ளியில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பிடிக்கப்பட்ட குடிநீர், கடும் துர்நாற்றம் வீசியபடி இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக, தகவல் அறிந்த ஆட்சியரும், எஸ்பியும் பள்ளிக்கு நேரில் வந்து குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். மேலும், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “குடிநீர் தொட்டி திறந்த நிலையில் இருந்ததால் காகம் போன்ற பறவைகள் மூலம் அழுகிய முட்டை வீசப்பட்டிருக்கலாம். இதனால், குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. குடிநீர் தொட்டியில் வேறு எதுவும் கலக்கப்படவில்லை. மேலும் இது, பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட குடிநீர் தொட்டி. அதனால், இக்குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படும்” என்றார். இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x