

சென்னை: திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுதொகை பெற்று நகை வழங்கும்திட்டத்தையும் செயல்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முறையாக வட்டிதொகையும், நகையும் வழங்காமல், அந்நிறுவனம் மோசடி செய்ததாக போலீஸில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து,அந்நிறுவனங்களுக்கு சொந்த மான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்டவை குறித்து அமலாக்கத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 20-ம் தேதி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராதரூ.23.70 லட்சம் பணம், 11.60 கிலோதங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள் ளது. தங்க முதலீடு திட்டம் என்ற போர்வையில், பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை போலிநிறுவனங்களில் முதலீடு செய்து,பொதுமக்களை ஏமாற்றி உள்ளதுதெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது.