

நாட்டின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்.
முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். காந்தியடிகள் காவலர் விருதுகள், அண்ணா விருதுகள், வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போர் நினைவிடத்தில் அஞ்சலி:
தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்னதாக போர் நினைவிடத்தில் ஆளுநர் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.